தூத்துக்குடி

மெஞ்ஞானபுரத்தில் நாளை தென் இந்திய அளவிலான கபடி போட்டி

DIN

மெஞ்ஞானபுரத்தில் தென் இந்திய அளவிலான கபடி போட்டி சனிக்கிழமை (16ஆம்தேதி) நடைபெறுகிறது.
 தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் அனுமதியுடன்  மெஞ்ஞானபுரம் கனம் ஜாண் தாமஸ் கபாடி கழகம்  சார்பில்  இந்திய கபடி வீரர் ஜா.ரவி சுந்தர் நினைவாக  தென் இந்திய அளவிலான கபடி போட்டி சனிக்கிழமை (பிப்.16) மெஞ்ஞானபுரம் ஜாண் தாமஸ் திடலில்நடைபெறுகிறது.  போட்டியில் ஜாண் தாமஸ் கபடி கழகம் காவல்துறைஅணி,  கஸ்டம்ஸ் அணி, வருமானவரி துறை அணி, தமிழ்நாடு தபால்துறை அணி,சென்னை சாய், திசையன்விளை, அளத்தங்கரை, தூத்துக்குடி மாவட்ட அணிகள்  கலந்து கொள்கின்றன. போட்டியில் முதல் பரிசு ரூ. 50,000,  இரண்டாவது பரிசு ரூ. 40,000-மூன்றாவது பரிசு ரூ .25,000-நான்காவது பரிசு ரூ. 20,000 வழங்கப்படுகிறது. 
 தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்  தலைவர் அனிதா  ஆர். ராதாகிருஷ்ணன்  எம்எல்ஏ  தலைமை வகிக்கிறார்,. முதல் போட்டியை   தூத்துக்குடி டிஎஸ்பி வி.பொன்ராமு  தொடங்கி வைக்கிறார். தொழிலதிபர்  ஜெ.டி. ஆனந்தராஜ்,  ஆர்.சுப்பையா , முன்னாள்  ஜாண் தாமஸ் கபடி கழக வீரர் எஸ்.டேவிட் ராஜ்,  முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.டி.கே,ஜெயசீலன், கே..சுரேஷ் ராஜன் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.  இதில்  புரோ கபடி வீரர்கள் உள்பட  பலர் பங்கேற்கின்றனர் என  ஜாண் தாமஸ் கபடி கழகத் தலைவர் கிறிஸ்டோபர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT