தூத்துக்குடி

அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை

DIN

சாலையோரங்களில் நிறுவப்படும் விளம்பரப் பதாகைகள் குறித்த சட்ட விதிகளைப் பின்பற்றுவது தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
   கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆணையாளர் கிரி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம  ஊராட்சி) முருகானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
இதுபோல,  கோவில்பட்டி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு நகராட்சி நகரமைப்பு அலுவலர் காஜாமுகைதீன் தலைமை வகித்தார்.  இதில்,  அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், திமுக நகரச் செயலர் கருணாநிதி, மார்க்சிஸ்ட்  நகரச் செயலர் முருகன், காங்கிரஸ்  நகரத் தலைவர் சண்முகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ், தமாகா தவமணி, தேமுதிக  பழனிசாமி,  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலர் நாகராஜன், மதிமுக நகரச் செயலர் பால்ராஜ், பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலர் காளிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் மனுவேல்ராஜ், பாஜக மாவட்டத் துணைத் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  
  இதுபோல, கழுகுமலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் உஷா தலைமையிலும், எட்டயபுரம்  பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சுந்தரவேல் தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வருவாய் ஆய்வாளர் பிரபாகரன்,  கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை  இதில்,  திமுக நகரச் செயலர் பாரதி கணேசன், பாஜக நகரத் தலைவர் நாகராஜன், காங்கிரஸ் நகரத் தலைவர் ராஜேந்திரன், மதிமுக நகரச் செயலர் காளிதாஸ், தேமுதிக நகரச் செயலர் செல்வம், பாமக நகரத் தலைவர் முனியராஜ், மனித நேய மக்கள் கட்சி நகரச் செயலர் நாசர், எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலர் காதர் மைதீன், வர்த்தகர்கள் சங்கத் தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.    
சாத்தான்குளம்: நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு  காவல் ஆய்வாளர் ராஜ் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ம.ரெங்கசாமிமுன்னிலை வகித்தார். இதில் அதிமுகவின் கிங்ஸ்லி, ஞானையா, பெரியதுரை திமுகவின் ரவிசெல்வக்குமார், ஜெயசிங்,மதிமுகவைச் சேர்ந்த குரு.மத்தேயு ஜெபசிங், ரஞ்சன், அ மமு கவைச்  சேர்ந்த கணேசன்,ராஜலிங்கம், பாஜகவின் கணேசன், காங்கிரஸின் ஜெயக்குமார்,கண்ணப்பன்,சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அனைத்து கூட்டத்திலும், ஊரகப் பகுதிகளில் சாலையோரம் விளம்பர பதாகைகள் மற்றும்  பேனர்கள் நிறுவும்போது, சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ள இடைக்கால உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT