தூத்துக்குடி

பேச்சுவார்த்தையில் உடன்பாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர் போராட்ட அறிவிப்பு வாபஸ்

DIN


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்காத குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து எட்டயபுரம் வட்டாட்சியர் வதனாள் தலைமையில் சமாதானக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலர் வேலுசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், தாலுகா குழு உறுப்பினர் நடராஜன், கிளைச் செயலர் முருகேசன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டி, பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில், எட்டயபுரம் பேரூராட்சிக்கு நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் குடி தண்ணீரை,  குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படுமெனவும்,  அதை பேரூராட்சி நிர்வாகம் நான்கு நாள்களுக்கு ஒரு முறை மக்களுக்கு விநியோகிக்கும் எனவும்  உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அறிவிக்கப்பட்ட தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT