தூத்துக்குடி

தூத்துக்குடி-திருநெல்வேலி ரயிலின்  பயண நேரத்தை குறைக்க வலியுறுத்தல்

DIN

தூத்துக்குடி- திருநெல்வேலி பயணிகள் ரயிலின் பயண நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் பயணிகள் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம், செயலர் பிரம்மநாயகம், பொருளாளர் லட்சுமணன் ஆகியோர் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஜீவன் உடனிருந்தார். மனு விவரம்: தூத்துக்குடி-திருநெல்வேலி- தூத்துக்குடி செல்லும் ரயில்களில் 3 மணி நேரமாக பயண நேரம் உள்ளது. இந்த ரயில்களை மின்சார ரயில்களாக மாற்றி பயண நேரத்தை 1.30 மணி நேரமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயிலை மதுரை-திண்டுக்கல்-கரூர்-நாமக்கல்-சேலம் வழியாக மாற்றினால், பயண நேரம் மற்றும் பயண தூரம் குறையும். மேலும், இந்த ரயிலை காலை 9.30 மணிக்குள் தூத்துக்குடிக்கு வந்து சேருமாறும், மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து  புறப்படுமாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருநெல்வேலி-பாலக்காடு இடையே இயக்கப்படும் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி- சென்னை இடையே புதிய ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்தி, புதிய பேருந்து நிலையம் அருகே 3 ஆம் கேட் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உணவு விடுதி வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT