தூத்துக்குடி

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 14 பேர் பணியிட மாற்றம்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 14 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணி தகுதியின் அடிப்படையில் நிர்வாக நலன் கருதி 14 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
 அதன்படி,  விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஹெலன் பொன்மணி, தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கருப்பசாமி, ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலராக (வ.ஊ) நியமிக்கப்பட்டுள்ளார். 
ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) தங்கவேல், விளாத்திகுளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பால ஹரிஹர மோகன் விளாத்திகுளத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் (கி.ஊ) ஆழ்வார் திருநகரிக்கும், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) வெங்கடாச்சலம், ஓட்டப்பிடாரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி (வ.ஊ) அலுவலர் சுடலை, சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ), சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) செல்வி சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) நியமிக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சிவபாலன்,  புதூர் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ) ,   புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முத்துக்குமார், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ),  கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சுப்புலட்சுமி கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (வ.ஊ) நியமிக்கப்பட்டுள்ளனர்.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக (வட்டார வளர்ச்சி பிரிவு) மேலாளர் மாணிக்கவாசகம், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி.ஊ),  கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முருகானந்தம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக (வட்டார வளர்ச்சி பிரிவு) மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT