தூத்துக்குடி

குரூப்-1 தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 4002 பேர் எழுதினர்

DIN

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் -1 தேர்வை 4,002 பேர் எழுதினர்.
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் குரூப்-1 பணிகளுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தத் தேர்வை எழுத 5,297 பேர் விண்ணப்பித்திருந்தனர்.  இதற்காக, 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
 இந்நிலையில், விண்ணப்பித்தவர்களில் 4,002 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.  1295 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.  தேர்வு பணிக்காக 3 கண்காணிப்பு குழுக்களும், கண்காணிப்பு பணிக்காக துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படைகளும்,  ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 தேர்வு மையங்களில் ஒவ்வொரு அறைக்கும் 20 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.  தேர்வு மையங்களைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT