தூத்துக்குடி

தேர்தல் விதிமுறை மீறல்: திமுக நிர்வாகி கைது

DIN

தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி  கொடிக்கம்பத்தை அகற்றாத திமுக நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, அரசியல் கட்சியினர் கொடிக்கம்பங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரங்களை நீக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள டீக்கடை அருகே திமுக கொடியுடன் உள்ள கொடிக்கம்பத்தை  அகற்றாதது, கிழக்கு காவல் நிலைய போலீஸார் திருமேனி, தேவேந்திரகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தெரியவந்தது.  இதையடுத்து, போலீஸார்  வழக்குப் பதிந்து, தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக திமுக மாணவரணி நகரச் செயலர் மயில்கர்ணனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT