தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் 2 பேர் வேட்பு மனு தாக்கல்: இன்றும், நாளையும் விடுமுறை

DIN

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வெள்ளிக்கிழமை இரண்டு பேர் மனு தாக்கல் செய்தனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியரிடம் கடந்த 19 ஆம் தேதி முதல் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் மூன்று நாள்களும் யாரும் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், நான்காம் நாளான வெள்ளிக்கிழமை இந்திய மக்கள் கட்சி (மதச்சார்பற்றது) சார்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் காபிரியல் ஜேம்ஸ் (57) வ மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பல்வேறு சிறுபான்மை இயக்கங்களின் ஆதரவோடு தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறேன். எனது பூர்வீகம் தூத்துக்குடி என்ற போதிலும் தற்போது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உழவன்கோணம் சியோன் நகரில் வசித்து வருகிறேன்.  என்னை வெற்றி பெறச் செய்தால் தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். தூத்துக்குடி மாவட்டத்துக்கு என்ன தேவை? என்பது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன் என்றார் அவர்.
விவசாயத் தொழிலாளி மனு: இதேபோல, தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகேயுள்ள கே. சிதம்பராபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47) என்ற விவசாயத் தொழிலாளி, மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்தவிட்டு கூறியது: தூத்துக்குடி மாவட்டம் வறட்சி மாவட்டமாக உள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார் அவர்.
இரண்டு நாள்கள் விடுமுறை: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இதுவரை இரண்டு பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.  சனிக்கிழமை (மார்ச் 23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்கள் என்பதால் வேட்பு மனுக்கள் பெறப்படாது என அறிவிக்கப்ட்டுள்ளது. தொடர்ந்து, மார்ச் 25 ஆம் தேதி தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றனர். வேட்பு மனு தாக்கல் மார்ச் 26 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT