தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் மே 18 இல் புற்றுநோய் பரிசோதனை முகாம்

சாத்தான்குளத்தில் புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் இலவச சித்த மருத்துவ முகாம் சனிக்கிழமை ( மே 18) நடைபெறுகிறது.

DIN

சாத்தான்குளத்தில் புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் இலவச சித்த மருத்துவ முகாம் சனிக்கிழமை ( மே 18) நடைபெறுகிறது.
சாத்தான்குளம் சேதுராமலிங்கம் வேலம்மாள் அறக்கட்டளை சேவா ,   திருநெல்வேலி சீட்  அறக்கட்டளை , திருநெல்வேலி கேன்சர் கேர் சென்டர் ஆகியன இணைந்து நடத்தும் இந்த  புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்,  இலவச சித்த மருத்துவ  முகாம் சாத்தான்குளம் விஸ்வகுல திருமணமண்டபத்தில்  சனிக்கிழமை  நடைபெறுகிறது.  
முகாமுக்கு சித்த  மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவராமன் தலைமை வகிக்கிறார்.  ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். 
சாத்தான்குளம் டிஎஸ்பி  பாலச்சந்திரன்,  திருச்செந்தூர் டிஎஸ்பி பரத் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை  தொடங்கி வைக்கின்றனர். இந்த முகாமில்,   ரத்த அழுத்தம் ,  சர்க்கரை அளவு,  புற்றுநோய் பரிசோதனை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது.
சித்த மருத்துவர்களின் பரிந்துரையின்படி ஐந்து நாள்களுக்கு மருந்து வழங்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT