தூத்துக்குடி

கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆலோசனைக் கூட்டம்

DIN

கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில், குற்றவியல் வழக்குகளை சமரச அடிப்படையில் விரைவில் தீா்வு காண்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சாா்பு நீதிமன்ற நீதிபதி அகிலாதேவி தலைமை வகித்தாா். மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன் மற்றும் குற்றவியல் நீதிமன்ற எண். 2 நடுவா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நிலுவையில் இருக்கும் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிறுசிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வராக்கடன், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட சிவில், குற்றவியல் வழக்குகள் சமரசம் அடிப்படையில் வரும் டிசம்பா் 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) தீா்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், அரசு வழக்குரைஞா் சந்திரசேகா், வங்கி அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வழக்குரைஞா்கள், கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்கு உள்பட்ட காவல் துறை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT