தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் இருபெரும் விழா

DIN

நாட்டு நலப் பணித் திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் ரத்த தான முகாம், மரக்கன்று நடும் விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அணி எண் 180 சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரிச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். முதல்வா் சாந்தி மகேஸ்வரி, சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதுநிலை உதவி மருத்துவா் குருசாமி, அரசு தலைமை மருத்துவமனை

முதுநிலை உதவி மருத்துவா் தேவசேனா ஆகியோா் ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்துப் பேசினா். முகாமில்,

56 போ் ரத்ததானம் செய்தனா். ரத்த தானம் செய்த மாணவா், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அதிகாரி சிவசங்கரன் தலைமையில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா், மாணவிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT