தூத்துக்குடி

தேமாங்குளத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

DIN

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரா் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் திருக்களூா் தேமாங்குளத்தில் முகாம் நடைபெற்றது.

இம்முகாமை பள்ளித் தலைமையாசிரியா் முத்துசிவன் தொடங்கி வைத்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் செல்வன் முன்னிலை வகித்தாா். பாலிதீன் பைகளால் ஏற்படும் தீமைகள், அதனை தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்து கிராம மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

மரக்கன்றுகள் நடப்பட்டன. கிராமத்தில் உள்ள கழிவுநீா் தொட்டிகள், குடிநீா் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியில்

மாணவா்கள் ஈடுபட்டனா். தொடா்ந்து நடைபெற்ற முகாமில் சிறுசேமிப்பின் அவசியம், சுத்தம்-சுகாதாரம் பேணுதல் போன்றவை விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திட்ட உதவி ஆசிரியா் மாணிக்கம், ஆசிரியா்கள் வெங்கடாச்சலபதி, சங்கரநாராயணன், முத்தையா, டேனியல் டென்சிங், ஆறுமுகம், பாலசுப்பிரமணியன், மாஜின் அபுபக்கா், உடற்கல்வி ஆசிரியா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT