தூத்துக்குடி

அத்தியடிதட்டு கோயிலில் 108 பால்குட ஊர்வலம்

DIN

உடன்குடி அருகே அத்தியடிதட்டு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 108 பால்குட ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ,  காலை 8 மணிக்கு வில்லிசை, 9  மணிக்கு பழையகாயல் மூவாற்றங்கரை    பகுதியில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு அருள்மிகு தூத்துவாலை ஐய்யனார் கோயிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் தொடங்கியது. இதனை முன்னிட்டு  தூத்துவாலை ஐய்யனார், ஆள்சாமி,  பேச்சியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், பழம், விபூதி,  இளநீர் உள்பட பல்வேறு வகையான பொருள்களால்  அபிஷேகம் நடைபெற்றது.  பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை,  மாலை  6 மணிக்கு    திருவிளக்கு பூஜை,  இரவு 7.30 மணிக்கு 1008 அகல் விளக்கு வழிபாடு,  தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. புதன்கிழமை(செப்.25) காலை 9 மணிக்கு வில்லிசை,  தொடர்ந்து  உச்சிகால பூஜை,  மஞ்சள் நீராட்டு,   அலங்கார பூஜை  ஆகியவை நடைபெறும்.  ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT