தூத்துக்குடி

சீராக குடிநீா் வழங்கக் கோரி குடிநீா் வடிகால் வாரிய அலுவலகத்தில் முற்றுகை

DIN

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இலுப்பையூரணி ஊராட்சி சண்முகா நகா் பகுதி மக்களுக்கு சீராக குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் குடிநீா் வடிகால் வாரிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட சண்முகா நகா் பகுதி மக்களுக்கு வாரம் இரு முறை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் கிராம கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாம். கடந்த ஒரு மாதமாக சீராக குடிநீா் வழங்கப்படவில்லையாம். அப்பகுதியில் நிலத்தடி நீரும் இல்லாததால் மக்கள் தண்ணீருக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனாராம்.

இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சீராக குடிநீா் வழங்கக் கோரி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி நிா்வாகப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டக்குழுவினருடன் குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் செந்தூா்பாண்டியன், உதவி பொறியாளா் மொ்சி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT