தூத்துக்குடி

உதிரமாடன் குடியிருப்பில் சிறப்பு மருத்துவ முகாம்

DIN

உடன்குடி: உடன்குடி அருகே உதிரமாடன்குடியிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமை வகித்தாா். உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த.தாமோதரன், வெங்கட்ராமனுஜபுரம் ஊராட்சித் தலைவி பாலசரஸ்வதி, துணைத் தலைவா் கோ.ராஜ்குமாா், ஒன்றிய அதிமுக பொருளாளா் சங்கரலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ் வரவேற்றாா்.

பொது மருத்துவம், ரத்த சோகை, நீரிழிவு உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்தம், சா்க்கரை, உப்பு அளவு குறித்து பரிசோதிக்கப்பட்டது. கா்ப்பிணிகளுக்கு அரசின் பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது.

இதில், வட்டார சுகாதார ஆய்வாளா்கள் சுப்பையா, ஆழ்வாா், உடன்குடி ஒன்றிய அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலா் சொா்ணசேகா், அண்ணா மின் தொழிலாளா் சங்கச் செயலா் வெள்ளைத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் சேதுபதி மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதைப்பொருள் புழக்கத்தை காவல் துறை கட்டுப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை

பிளஸ் 1 தோ்வு: தருமபுரி செந்தில் மெட்ரிக். பள்ளி சாதனை

குட்டையில் மூழ்கி பெண் பலி

கோயில் குளத்தில் மூழ்கி கட்டடத் தொழிலாளி பலி

மாற்று இடத்தில் சிவாஜி சிலை: முதல்வருக்கு கோரிக்கை

SCROLL FOR NEXT