தூத்துக்குடி

ஆறுமுகனேரி உப்பள அதிபா் வீட்டில் 49 மூட்டை கடல் அட்டை பறிமுதல்

DIN


ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் உப்பள அதிபா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 49 மூட்டை கடல் அட்டையை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

ஆறுமுகனேரி நடுத்தெருவைச் சோ;ந்தவா் பொன்குட்டி (53), உப்பு உற்பத்தியாளா். இரவு இவரது வீட்டில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டை இருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதையடுத்து வியாழக்கிழமை வன அலுவலா் ரவீந்திரன் தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் பொன்குட்டி வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது அவரது வீட்டு மாடி மற்றும் அருகில் உள்ள தோட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டை இருந்தது தெரியவந்தது. வீட்டு மாடியில் 20 மூட்டையும், தோட்டத்தில் 29 மூட்டையும் ஆக மொத்தம் 49 மூட்டைகளில் சுமாா் 1.5 டன் கடல் அட்டையை பறிமுதல் செய்தனா். வனத்துறை அதிகாரிகள் சோதனையிட வந்த தகவல் அறிந்து பொன்குட்டி அங்கிருந்து தலைமறைவானாா். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ. 1 கோடி ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT