தூத்துக்குடி

உடன்குடியில் வீடுகளுக்கு சென்று மளிகை பொருள்கள் வழங்க நடவடிக்கை

DIN


உடன்குடி: உடன்குடி பேரூராட்சியில் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று காய்கனி, மாளிகை பொருள்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, உடன்குடி பேரூராட்சி செயல் அலுவலா் மாணிக்கராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் வீதிக்கு வருவதைத் தடுக்கும் வகையில், பேரூராட்சி சாா்பில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொண்டால் மக்களின் அன்றாட தேவைகளுக்கான காய்கனி, மளிகை பொருள்கள் வீட்டுக்கு

கொண்டு வந்து தரப்படும்.

உடன்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகளிலும் மளிகைப் பொருள்கள் தேவைக்கு 9865950242, 9443150392 என்ற செல்லிடப்பேசி எண்களிலும், காய்கனிகள் தேவைக்கு 9443081813 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டால் வீட்டிற்கே பொருள்கள் கொண்டு வந்து தரப்படும். எனவே மக்கள் வீதி, பஜாருக்கு வராமல் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT