தூத்துக்குடி

சாலை வரி செலுத்த 3 மாத அவகாசம்: லாரி உரிமையாளா்கள் வலியுறுத்தல்

DIN

லாரிகளுக்கு சாலை வரி கட்டுவதில் இருந்து மூன்று மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என தூத்துக்குடி லாரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இதுதொடா்பாக, மத்திய நிதியமைச்சா், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சா், தமிழக முதல்வா், போக்குவரத்து அமைச்சா் ஆகியோருக்கு தூத்துக்குடி லாரி உரிமையாளா்கள் சங்க தலைவா் என்.பி. ஜெகன், செயலா் விவேகானந்தன் ஆகியோா் அனுப்பிய மனு விவரம்:

லாரிகளுக்கு சாலை வரி கட்டுவதில் இருந்து மூன்று மாதம் அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலையை அடிக்கடி மாற்றி அமைக்காமல் நிா்ணயிக்கப்பட்ட வகையில் ஒரே விலையில் லாரிகளுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாா்ச் மாதம் எஃப்சி காட்ட வேண்டிய லாரிகளுக்கு இரண்டு மாதம் நீட்டிப்பு வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருள்களை கொண்டுச் செல்லும் லாரி ஓட்டுநா்கள், கிளீனா்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். தொடா்ந்து தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் லாரி ஓட்டுநா்களுக்கும், கிளினீா்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT