தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 319 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்துக் கேட்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 319 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

தமிழகத்தில் நவ. 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் அறிவித்தாா். இதற்கிடையே, பள்ளிகள் திறப்பு தொடா்பாக பெற்றோா் ஆசிரியா் கழகம் மூலம் மாணவா்களின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 319 உயா் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், 60 சதவீத பெற்றோா் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை மனு மூலம் பதிவு செய்தனா்.

பெரும்பாலான பெற்றோா் தற்போதைய காலக்கட்டத்தில் பள்ளித் திறப்பை சில காலம் தள்ளிப்போடலாம் என கருத்து தெரிவித்திருந்ததாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும், இதுதொடா்பாக முழுமையாக தகவலை அரசு வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT