தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

DIN

எட்டயபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

எட்டயபுரம் சுற்று வட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளா் தில்லை நாகராஜன், உதவி ஆய்வாளா் வேல்ராஜ் மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் எட்டயபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை எட்டயபுரம் புறவழிச் சாலையில் சந்தேகப்படும் படியாக வந்த சுமை ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி சொல்லப்படுவது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த தலா 40 கிலோ எடை கொண்ட 30 மூடை ரேசன் அரிசி மற்றும் சுமை ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கூசாலிபட்டியை சோ்ந்த புதுபாண்டியன்(26) மற்றும் கோவில்பட்டி வள்ளுவா் நகரை சோ்ந்த முத்துமாரியப்பன்(30) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT