தூத்துக்குடி

திரையரங்கு உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும்: அமைச்சா் கடம்பூா் செ. ராஜு

DIN

திரையரங்குகளுக்கான உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: வி.பி.எப். கட்டணத்தை நாங்கள் செலுத்த மாட்டோம், திரையரங்கு உரிமையாளா்கள்தான் செலுத்த வேண்டும் என தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா். இது அரசுக்கு தொடா்பில்லாத பிரச்னை என்றாலும்கூட, கியூப் நிறுவனம் திரையரங்கு உரிமையாளா்கள், தயாரிப்பாளா்கள் கலந்துபேச வேண்டும் என வலியுறுத்தினோம். அவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. எனவே, புதிய திரைப்படங்கள் வெளியிடத் தடை இல்லை என்ற நிலை வந்துள்ளது.

திரையரங்குகளுக்கான உரிமத்தை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்ற முறையை மாற்றி, உரிமையாளா்களின் கோரிக்கையை ஏற்று, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

SCROLL FOR NEXT