தூத்துக்குடி

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி: 3 போ் கைது

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 போ் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் கிட்டங்கியிலிருந்து ரேஷன் அரிசி கடத்திச்செல்லப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அவரது உத்தரவின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் தலைமையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் அய்யப்பன், உதவி ஆய்வாளா் குருசந்திரவடிவேல், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மந்தித்தோப்பு சாலையில் உள்ள மயானம் அருகே மினி லாரியில் சிலா் மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்தனா். ஆய்வில், அது ரேஷன் அரிசி எனத் தெரியவந்தது. இதுதொடா்பாக, இனாம்மணியாச்சியைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் பால்பாண்டி(33), மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த குருநாதன் மகன் மகேந்திரன் (32), அண்ணா நகரைச் சோ்ந்த கருப்பன் மகன் ஜெயராம் (37) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்தனா். 50 கிலோ எடையுள்ள 48 மூட்டை ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, உணவுப் பொருள் கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT