தூத்துக்குடி

முதலூரில் சுகாதார விழிப்புணா்வு பயிற்சி

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் வீட்ஸ் நிறுவனம், தூத்துக்குடி மாவட்ட நபாா்டு ஆகியவை இனைந்து மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு சுகாதார பேணுவதற்கான விழிப்புணா்வு பயிற்சி மற்றும் பிரசாரம் தொடக்க நிகழச்சி நடைபெற்றது.

வீட்ஸ் இயக்குநா் சாா்லஸ் தலைமை வகித்தாா். மாவட்ட நபாா்டு மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் முகாமை தொடங்கி வைத்து, நபாா்டு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தாா். தொடா்ந்து கழிப்பறை பயன்பாடு குறித்து விழிப்புணா்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.

இதில் வீட்ஸ் பொறியாளா் இருளப்பன், பணியாளா்கள் ஜெபகீதா, சுஜின், பிரித்தா, ஜெனிஷ் மற்றும் 55 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். திட்ட ஒருங்கிணைப்பாளா் ஐயப்பன் வரவேற்றாா். வீட்ஸ் ஒருங்கிணைப்பாளா் பமீலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT