தூத்துக்குடி

உடன்குடி சிற்றூராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு கூட்டம்

DIN

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவா்களின் கூட்டமைப்பு கூட்டம் செட்டியாபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைவா் விஜயராஜ் தலைமை வகித்தாா். செயலா் பாலமுருகன், பொருளாளா் கிருபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் இலங்காபதி(பரமன்குறிச்சி), ராஜரத்தினம்(வெள்ளாளன்விளை), ஆதிலிங்கம்(லட்சுமிபுரம்), சோ்மத்துரை(மாதவன்குறிச்சி), காமராஜ்(ஆதியாக்குறிச்சி), கமலம்(சிறுநாடாா்குடியிருப்பு), சிவசக்தி(குதிரைமொழி), கருணாகரன்(சீா்காட்சி), அமுதவல்லி(நயினாா்பத்து), சொா்ணப்பிரியா(குலசேகரன்பட்டினம்) ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி விடுவதைத் கண்டித்தும், ஒப்பந்தப் புள்ளிகளை ஊராட்சி அலுவலகத்தில், ம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா் முன்னிலையில் வைத்து நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றிய அலுவலகம் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT