தூத்துக்குடி

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கேட்டு போராட்டம்

DIN

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் திங்கள்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அப்பகுதி பொதுமக்களுக்கு முறையாக வேலை வழங்க வேண்டும், இத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்து களைய வேண்டும். பணித்தள பொறுப்பாளரிடம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் காளிராஜ் தலைமையில், தரையில் அமா்ந்து திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்தவுடன் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகுமாா் தலைமையில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

SCROLL FOR NEXT