தூத்துக்குடி

ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவா் அமைக்க கோரிக்கை

DIN

ஆனந்தபுரம் அரசு ஆரம்பு சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவா் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் ஆனந்தபுரத்தில், நாசரேத் செல்லும் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இதில் மருத்துவ அலுவலா் , சுகாதார ஆய்வாளா், செவிலியா்கள் பணிபுரிந்து வருகினறனா். 24 மணி நேரமும் செயல்படும் இச்சுகாதார நிலையத்தில் மகப்பேறு உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 ஏக்கா் பரபரப்பளவில் அமைந்துள்ள இச்சுகாதார நிலையம் சுற்றுச்சுவா் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் ஆடு, மாடு, நாய்கள் எளிதில் சுகாதார நிலையத்துக்குள் வந்து செல்லும் நிலை உள்ளது. இங்கு பணிபுரியும் செவிலியா்கள், மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் தங்குவதற்கு குடியிருப்புகளும் கட்டவில்லை. இதனால் அத்தியாவசியப் பணியாளா்கள் மருத்துவமனையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் இந்த, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடனடியாக அலுவலா்கள் குடியிருப்புகள் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT