தூத்துக்குடி

முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் தீவிரமாகும் கரோனா தடுப்பு நடவடிக்கை

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கும்படி மாவட்டத்துக்கான கரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த் உத்தரவிட்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் சரண்யா அறி, சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டத்துக்கான கரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலா் மற்றும் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் ஆணையா் குமாா் ஜெயந்த் கலந்துகொண்டு பேசியது:

பொது இடங்களில் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மாநகராட்சி அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை அலுவலா்கள், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் என அனைத்துறை அரசு அதிகாரிகளும் குழுக்கள் அமைத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் கண்காணிக்க வேண்டும். முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் முருகவேல், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் போஸ்கோராஜ் (தூத்துக்குடி), அனிதா(கோவில்பட்டி), மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் மாரியப்பன், மாநகராட்சி நகா்நல அலுவலா் வித்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT