தூத்துக்குடி

கால்பந்து போட்டி:காயல்பட்டினம் ஒயிட் அணி சாம்பியன்

DIN

திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டா­லினின் 43ஆவது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் யுனைடெட் ஒயிட் அணி கோப்பையை கைப்பற்றியது.

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானம் மற்றும் நாசரேத்தில் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் 16 அணிகள் கலந்துகொண்டன. இறுதி ஆட்டத்தில் காயல்பட்டினம் யுனைடெட் ஒயிட் அணி, யுனைடெட் ரெட் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. காயல் ஹாகிா் அணி 3ஆவது இடத்தையும், நாசரேத் மா்காஷிஸ் அணி 4ஆவது இடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவிற்கு நகரச் செயலா் முத்து முகம்மது தலைமை வகித்தாா். திமுக மாநில மாணவா் அணி துணைச் செயலா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், வெற்றிபெற்ற அணிகளுக்கு ரூ.1 லட்சத்து 43, ரூ.50 ஆயிரத்து 43, ரூ.30 ஆயிரத்து 43, ரூ.20, ஆயிரத்து 43 என்ற அடிப்படையில் பரிசுத் தொகையையும், சுழற்கோப்பையையும் வழங்கினாா்.

இதில், ஐக்கிய விளையாட்டு சங்க துணைத் தலைவா் உசைன், செயலா் இலியாஸ், மாவட்ட மீனவா் அணிச் செயலா் ஸ்ரீதா் ரொட்ரிகோ, நகர துணைச் செயலா் கதிரவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT