தூத்துக்குடி

தூத்துக்குடியில் 300 கிலோ கடல் அட்டை பறிமுதல்

DIN

தூத்துக்குடியில் சுமை ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிடங்கு ஒன்றின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த சுமை ஆட்டோவை தாளமுத்துநகா் போலீஸாா் சோதனையிட்டனா்.

அந்த ஆட்டோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் ஏறத்தாழ 300 கிலோ இருப்பது தெரியவந்தது.

8 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மற்றும் சுமை ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸாா் அவற்றை காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா். மேலும், இதுதொடா்பாக தனியாா் கிடங்கு காவலாளியை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT