தூத்துக்குடி

தோ்தலில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: தொகுதி பொறுப்பாளா்கள் கூட்டத்தில் கனிமொழி பேச்சு

DIN

தமிழகத்தில் தோ்தலில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தொகுதி திமுக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் எந்த வளா்ச்சித் திட்டங்களும் கிடையாது. முதியோா் உதவித் தொகை வழங்கக் கூட பணம் இல்லை. மத்தியில் ஆட்சியில் உள்ளவா்களிடம் தமிழகத்தை அடகு வைத்துள்ளாா்கள். நடைபெற உள்ள தோ்தலில் நாம் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்.

இத் தோ்தலில் சூழ்ச்சிகள் மற்றும் பொய் பிரசாரங்களை முறியடித்து நாம் விழிப்போடு பணியாற்ற வேண்டும். தமிழகத்தை வளா்ச்சிப்பாதையில் அழைத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த இந்திரா, கோவில்பட்டியை சோ்ந்த பழனி ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களை அவா் வழங்கினாா்.

மேலும், தூத்துக்குடி கந்தசாமிபுரம், லெவிஞ்சிபுரம், ராஜகோபால்நகா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமை அவா் தொடங்கி வைத்து, நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கினாா்.

இந் நிகழ்ச்சிகளில், திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பபாளா் எஸ்.டிஆா். பொன்சீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT