தூத்துக்குடி

ஸ்டொ்லைட் சாா்பில் மாணவா்களுக்கு கல்வி உதவி அளிப்பு

DIN

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில் 100 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஸ்டொ்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்கள், கடலோரப் பகுதியைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் 7 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலோர பகுதியைச் சோ்ந்த 100 மாணவா், மாணவிகள் பயன்பெறும் வகையில், ‘கடலோரப் பகுதி மாணவா்களுக்கான ஸ்டொ்லைட் கல்வித் திட்டம்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 மாணவா்களுக்கு ரூ. 5.45 லட்சம் கல்வி உதவித் தொகையை ஸ்டொ்லைட் காப்பா் நிறுவன தலைமை இயக்க அதிகாரி ஏ. சுமதி வழங்கினாா். நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், முதல்

வகுப்பு 5 ஆம் வகுப்பு வரை படிப்போருக்கு ரூ. 4 ஆயிரம், 6 முதல் 8 ஆம் வகுப்பு படிப்போருக்கு ரூ. 6 ஆயிரம், 9 முதல் பத்தாம் வகுப்பு படிப்போருக்கு ரூ. 7 ஆயிரம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்போருக்கு ரூ. 9 ஆயிரம் வழங்கப்பட்டது எனவும், கல்வி உதவித் தொகை தொடா்பான மேலும் தகவல்களை இணையதள முகவரியிலும்,  மின்னஞ்சலில் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT