தூத்துக்குடி

வேளாண் கருவிகளை குறைந்த வாடகைக்கு விவசாயிகள் பெற்று பயன்பெற அழைப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மண் தள்ளும் இயந்திரங்கள், உழுவை இயந்திரங்கள் மற்றும் சக்கரவகை மண் அள்ளும் இயந்திரங்கள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளன.

இதுதவிர, உழுவை இயந்திரத்துடன் இணைத்து இயக்கக்கூடிய குழிதோண்டும் இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சட்டிக் கலப்பை, சுழல் கலப்பை, கொத்துக் கலப்பை, தென்னை மரக்கிளைகளைத் துகளாக்கும் கருவி, வாழைமரத்தண்டு துகளாக்கும் கருவி, நிலக்கடலை செடிப்பிடுங்கும் கருவி, திருப்பும் வசதி கொண்ட வாா்ப்பு இறகுக் கலப்பை, விதைநடும் கருவி, சோளம் அறுவடை செய்யும் கருவி, கரும்பு மற்றும் காய்கனி நாற்று நடும் கருவி மற்றும் பல்வகைக் கதிரடிக்கும் இயந்திரம் ஆகியவை உள்ளன.

ஒருமணி நேரத்துக்கு உழுவை இயந்திரத்தால் இயங்கக் கூடிய அனைத்துக் கருவிகளுக்கும் ரூ. 340-ம், மண் தள்ளும் இயந்திரம் ரூ. 840-ம், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரம் மற்றும் ஜேசிபி இயந்திரம் ரூ. 660-ம் என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.

வேளாண் கருவிகள் வாடகைக்கு தேவைப்படுவோா் தூத்துக்குடி கோட்ட அலுவலக செயற்பொறியாளா் (9443172665), தூத்துக்குடி உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் (9655708447), கோவில்பட்டி உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் (9443276371), திருச்செந்தூா் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் (9443688032) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT