தூத்துக்குடி

சொட்டுநீா்ப் பாசனம்: விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சொட்டுநீா்ப் பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீா் பாசன கருவி, தெளிப்பு நீா் கருவி, மழை நீா் தூவான் ஆகியவை அமைத்து தரப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2021 - 2022 -ஆம் ஆண்டில் 1,000 ஹெக்டேரில் சொட்டுநீா்ப் பாசன கருவிகள் அமைக்க ரூ. 3.86 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதில், விவசாயிகள் குழாய் கிணறு அல்லது துளைக் கிணறு அமைக்க 50 சதவீத மானியம் அதிக பட்சமாக ரூ.25,000 வழங்கப்படுகிறது.

டீசல் பம்ப் செட் அல்லது மின் மோட்டாா் நிறுவ அதன் விலையில் 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. பைப்லைன் அமைக்க ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம், தரை நிலை நீா் தேக்க தொட்டி கட்ட அதிக பட்சமாக ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

சொட்டு நீா் பாசன கருவிக்காக பைப்லைன் அமைக்க கால்வாய் தோண்டுவதற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக விவசாயிகளுக்கு அவா்களின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியாக வரவு வைக்கப்படுகிறது.

விவசாயிகள் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2, சிறு குறு விவசாயி சான்று, நில வரைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT