தூத்துக்குடி

கரோனா இறப்புச் சான்றிதழ்குளறுபடிகளை நீக்க வலியுறுத்தல்

DIN

கோவில்பட்டி: கரோனா இறப்புச் சான்றிதழில் குளறுபடிகளை நீக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் விடுத்துள்ள அறிக்கை:

கரோனா தொற்றினால் உயிரிழந்தோருக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழில் பல குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், சுவாச பிரச்னை, நிமோனியா காய்ச்சல் என சில இணை நோய்கள் இருப்பதாகவும் சான்றிதழில் குறிப்பிடுவதால் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண உதவிகள் கிடைப்பதில் சிக்கல் எழும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது . எனவே, அரசு இதைத் தெளிவுப்படுத்த வேண்டும். கரோனாவுக்கு பலியாகி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT