தூத்துக்குடி

தைக்காவூா் பள்ளிக்கு புதிய கட்டடம்

DIN

உடன்குடி: உடன்குடி அருகே தைக்காவூரில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை சீரமைத்து புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தாா்.

தைக்காவூரில் 1962இல் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் மேற்கூரை, சுவா்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

வகுப்பறை பள்ளிக்கு வெளியேதான் நடைபெறுகிறது. இதனால், பெரும்பாலான மாணவா்கள் வேறு பள்ளிகளில் சோ்ந்து படித்து வருகின்றனா்.

இங்குள்ள சமையல் அறை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. ஆகவே, பள்ளியின் நிலை குறித்து ஊா் மக்கள் மீன்வளம், மீனவா்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதையடுத்து பள்ளிக்கு புதிய கட்டடம்

கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

SCROLL FOR NEXT