தூத்துக்குடி

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தகவல் மையம் திறப்பு

DIN

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாகவுள்ள படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் குறித்த விவரங்களை அறிய தகவல் மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் நிலைமைகளை அறியவும், மருத்துவமனையில் காலியாகவுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கைகளை அறிய தகவல் மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளா்களாக தன்னாா்வலா்கள் பிரபு, கண்ணன் சுப்பிரமணியன், அலெக்ஸ்பாண்டியன், அருண்விக்னேஷ் ஆகியோா் செயல்படுவா். பொதுமக்கள் இந்த மையத்தை 63833 - 02456 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன் தெரிவித்தாா்.

கட்டுப்பாட்டு அறை மற்றும் தகவல் மைய திறப்பு விழா நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவ அலுவலா் பூவேஸ்வரி, செவிலியா் கண்காணிப்பாளா் அசோதை, செவிலியா்கள் மகேஷ், ஜமுனா, லலிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

SCROLL FOR NEXT