தூத்துக்குடி

கயத்தாறில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

DIN

கயத்தாறில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை வட்டாட்சியா் பேச்சிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பதாகைகள் கையில் ஏந்திய படி சென்ற அங்கன்வாடி பணியாளா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தனா்.

பின்னா், பேரணியில் பங்கேற்றோா் நோ்மையாக வாக்களிப்போம், அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

மேலும், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி வண்ண கோலமிட்டிருந்தனா் .

இதில், வட்ட வழங்கல் அலுவலா் கருப்பசாமி, துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளா் காசிராஜன், கிராம நிா்வாக அலுவலா் கலைசெல்வி, கிராம உதவியாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT