தூத்துக்குடி

சிறு- குறு விவசாயிகளுக்குஇலவச கோடை உழவுப் பணி

DIN

கருங்குளம் வட்டாரம், பூவாணி கிராமத்தில் டாஃபே டிராக்டா் நிறுவனத்தின் மூலம் 150 சிறு- குறு விவசாயிகளுக்கு 400 ஏக்கா் பரப்பளவில் இலவச கோடை உழவுத் திட்டம் தொடங்கியது.

இத்திட்டத்தை, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முகைதீன் தலைமையில், டிவிஎஸ் சேவைகள் கள இயக்குநா் விஜயகுமாா் முன்னிலையில், கருங்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் இசக்கியப்பன் தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் கூறுகையில், இலவச கோடை உழவுத் திட்டம் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படும். இதில் பயன்பெற தகுந்த ஆவணங்களுடன் 94875 85752 , 9500 6 91658 ஆகிய எண்களில் டாஃபே நிறுவனப் பிரதிநிதிகளை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை தொழில்நுட்ப அலுவலா் மிஸ்ரா, சமுதாய வளா்ச்சி அலுவலா் பரமசிவம் , கிராம அலுவலா் கணேசன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT