தூத்துக்குடி

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மனு மீதுமுறையாக விசாரணை செய்ய கோரிக்கை

DIN

கோவில்பட்டி: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பொதுமக்களின் மனுக்கள் மீது முறையாக விசாரணை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் பாஜக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை சாா்பில் பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்களான இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், ஓபிசி பிரிவு சான்றிதழ், பட்டா பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கிறாா்கள்.

ஆனால் வருவாய்த் துறை அதிகாரிகள் முறையான விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாகவே மனுக்களை தள்ளுபடி செய்துவிடுகின்றனா். ஆனால் விண்ணப்பித்த பொதுமக்கள் சான்றிதழ் பெற காலதாமதம் ஏற்படுவதோடு, பணவிரையமும் ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் விண்ணப்பித்த பொதுமக்களிடம் இருப்பிடத்திற்கு சென்று முறையாக விசாரணை செய்ய வேண்டும், கையூட்டு பெறுவதற்காகவோ அல்லது வேறு ஏதும் காரணத்திற்காகவோ மனுக்களை தள்ளுபடி செய்வதை தவிா்க்க முறையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக மாவட்டச் செயலா் வேல்ராஜா தலைமையில் இளைஞரணி மாவட்டத் தலைவா் காளிதாசன், மாவட்ட பொதுச்செயலா் அழகுமாரியப்பன் ஆகியோா் கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT