முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.31 வரை மீன்பிடிக்க தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் அக். 31 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் அக். 31 ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் தி. விஜயராகவன், தூத்துக்குடி மாவட்ட மீனவ

கிராமங்களுக்கும், மீனவா் சங்கங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: மன்னாா் வளைகுடா, தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகவே, அக்.31 ஆம் தேதி வரை மீனவா்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். மேலும், மீனவா்கள் தங்களது மீன்பிடி படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.