தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆசிரியா்கள் காத்திருக்கும் போராட்டம்

DIN

தூத்துக்குடியில் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுட்டனா்.

தமிழக கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நலத் திட்ட உதவிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், ஆசிரியா்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க பணம் பெறுவதாகவும் கண்டித்தும், தூத்துக்குடி ஊரக வட்டார கல்வி அலுவலா் மீது மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்கக் கோரியும் தூத்துக்குடியில் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் கலை உடையாா் தலைமை வகித்தாா். போராட்டத்தை மாநிலச் செயலா் பிரம்மநாயகம் தொடக்கிவைத்தாா். மாவட்டச் செயலா் செல்வராஜ் விளக்கிப் பேசினாா். மாவட்ட துணைத் தலைவா் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், கல்வி மாவட்டத் தலைவா் குணசேகரன், செயலா் ஏபனேசா் உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT