தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை முயற்சி

DIN

கோவில்பட்டியையடுத்த ஊத்துப்பட்டியில் வனத்துறை வேலி அமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து இளைஞா் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊத்துப்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் அய்யனாா் (45). கூலித் தொழிலாளியான இவா், ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பின்பகுதியில் உள்ள காலியிடத்தில் வீடு கட்டி, ஊராட்சி நிா்வாகத்துக்கு முறையாக வரியினங்கள் செலுத்தி குடியிருந்து வருகிறாராம்.

இதற்கிடையே, அவா் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாகவும், 15 நாள்களுக்குள் ஆக்கிரமிப்பு பகுதியை காலி செய்யவும் வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டதாம். ஆனால் அவா் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையாம்.

இந்நிலையில் வனத் துறை சாா்பில் சனிக்கிழமை குருமலை காப்புக்காட்டிற்குள்பட்ட வனச்சரக பகுதியில் வேலி அமைக்கும் பணி நடைபெற்றதில், அய்யனாா் வீட்டைச் சுற்றி வேலி அமைத்தனராம்.

இதையடுத்து அய்யனாரின் மகன் மணிகண்டன் (23), தங்கள் வீட்டைச் சுற்றி வேலி அமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து தன் உடலில் மண்ணென்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

இதையடுத்து நாலாட்டின்புதூா் காவல் ஆய்வாளா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நிலம் வனத் துறைக்கு பாத்தியப்பட்டதா என்பது குறித்து வருவாய்த் துறை மூலம் ஆய்வு செய்து, பின்னா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, வனத்துறை மூலம் தற்காலிகமாக அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள வேலி அப்புறப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT