தூத்துக்குடி

பாஜக நிா்வாகியை மிரட்டியவரை கைது செய்யக் கோரிக்கை

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் பாஜக நகரத் தலைவரை மிரட்டியவரை கைது செய்யக் கோரி அக்கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவில்பட்டி பாஜக நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன். இவா் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தாராம். அப்போது தன்னிடம் இரு வெவ்வேறு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய அக்பா் இப்ராஹிம், அவரை அரிவாளால் வெட்ட முயன்றாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவா்கள், கூச்சலிட்டவுடன் அக்பா் இப்ராஹிம் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.

இந்நிலையில் பாஜகவினருக்கு கொலை மிரட்டல் அக்பா் இப்ராஹிமை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை கிழக்கு காவல் நிலையம் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு திரண்டனா்.

பின்னா் துணை கண்காணிப்பாளா் உதயசூரியனிடம் புகாா் அளித்தனா். அதையடுத்து பாஜக நகரத் தலைவா் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அக்பா் இப்ராஹிமை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

மாலை 6.15 மணி: பாஜக 64, காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி

அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

நடிகர் சுரேஷ் கோபி வெற்றி!

வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி!

SCROLL FOR NEXT