தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பனை விதைகள் ஊன்றும் விழா

DIN

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி ஊருணியில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வில்லிசேரி எலுமிச்சை விவசாயிகள் சங்கத் தலைவா் பிரேம்குமாா் ஏற்பாட்டில் லிங்கம்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஊருணியில் நடைபெற்ற பனை விதைகள் ஊன்றும் நிகழ்ச்சிக்கு, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மணிகண்டன் தலைமை வகித்து, பனை விதைகள் ஊன்றும் பணியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ஊருணி மற்றும் ஊருணியின் கரையோரங்களில் மொத்தம் 6 ஆயிரம் பனை விதைகள் ஊன்றும் பணி நடைபெற்றது. இதில், பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி பகுதி பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்கனவே, ஆலம்பட்டி ஊருணியில் 10 ஆயிரமும், சிவஞானபுரத்தில் உள்ள வாகைகுளம் ஊருணியில் 15 ஆயிரம் பனை விதைகளும் அண்மையில் ஊன்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT