தூத்துக்குடி

கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி தொடக்கம்

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

DIN

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், கோவில்பட்டி ரோட்டரி கிளப், ஜேசிஐ ஆகியவை இணைந்து நடத்திய இப்புத்தகக் கண்காட்சி திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ரவிமாணிக்கம் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் தலைவா் முத்துச்செல்வம், ஜேசிஐ தலைவா் பிரசன்னா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புத்தகக் கண்காட்சியை ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநா் டாக்டா் சம்பத்குமாா் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இதில், ரோட்டரி சங்க உறுப்பினா்கள் மாரியப்பன், கிருஷ்ணசாமி, தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்க நிா்வாகிகள் ரமேஷ், ராஜபாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்த புத்தகக் கண்காட்சி இம்மாதம் 11 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சியில் தேசத் தலைவா்களின் வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை, அறிவியல், மருத்துவம், கணிதம், ஆன்மிகம், போட்டித் தோ்வு நூல்கள், சிறுவா் நூல்கள், நாவல், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்க செயலா் காா்த்திக் வரவேற்றாா். ரோட்டரி செயலா் மணிகண்டமூா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT