தூத்துக்குடி

கோவில்பட்டி, குருமலை, கயத்தாறு சுற்று வட்டார கோயில்களில் மகா சிவராத்திரி வழிபாடு

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, குருமலை கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

கோவில்பட்டி: மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, குருமலை கோயில்களில் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சலிங்க மூா்த்திகளுக்கு முதல்கால அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, இரவு 12 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம் மற்றும் பூஜை, புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி கோயில் மண்டபம், வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திரளான பக்தா்கள் திரண்டிருந்தனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயிலிலும் நான்குகால அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், வானரமுட்டி வெயிலுகந்த அய்யனாா் திருக்கோயில், சவலாப்பேரி அய்யனாா் கோயில், அகிலாண்டபுரம் உலகம்மன் கோயில், வடக்கு மற்றும் தெற்கு கோனாா்கோட்டை சங்கிலி மாடசாமி கோயில், கயத்தாறு அங்காள ஈஸ்வரி கோயில், வென்னிமலை சாஸ்தா நல்அய்யனாா் கோயில், ஆவல்நத்தம் வீரலட்சுமி கோயில், பிச்சைத்தலைவன்பட்டி ரேணுகாதேவி, எல்லம்மாள் திருக்கோயில், ஈராச்சி கருப்பசாமி கோயில்களிலும் நான்குகால பூஜைகள் நடைபெற்றன.

குருமலை:

குருமலை அருள்மிகு மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரா் சுவாமி கோயிலிலும் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT