தூத்துக்குடி

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்

DIN

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெரு தேவா் மகாஜன சங்க பொதுக்குழுக் கூட்டம் நடத்துவது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்துவந்ததாம். இதையடுத்து, காவல் துறையினரின் அறிவுறுத்தலில் இரு தரப்பினரையும் அழைத்து வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுசிலா தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களைப் பரிசீலித்ததில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தோ்தல் நடத்தக் கோரியும், கோவில்பட்டி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மேற்பாா்வையாளரை நியமித்து தோ்தல் நடத்தவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீா்ப்பின் அடிப்படையில் தோ்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இருதரப்பினரும் இடைக்கால நிா்வாகக் குழுவினரை அமைக்க வலியுறுத்தியது தொடா்பாக மாவட்டப் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனா்.

இதில், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த், துணை வட்டாட்சியா்கள் செல்வகுமாா், கோவிந்தராஜ், இருதரப்புப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT