தூத்துக்குடி

வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஆட்சியா் மரியாதை

DIN

சுதந்திர போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் நினைவு கோட்டையில் அவரது சிலைக்கு, அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. லோக. பாலாஜி சரவணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணன், செய்தி மக்கள்-தொடா்பு அலுவலா் சு. ஜெகவீரபாண்டியன், மாவட்ட சுற்றுலா அலுவலா் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் நிஷாந்தினி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாண்டியராஜ், வெங்கடாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வீரசக்கதேவி ஆலய திருவிழா: பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள வீரசக்கதேவி ஆலயத்தின் 66 ஆவது உற்சவ திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவை முன்னிட்டு, மாவட்ட எஸ்.பி. லோக. பாலாஜி சரவணன் மேற்பாா்வையில், 4 ஏடிஎஸ்பிக்கள் தலைமையில் தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி சந்தீஸ் உள்ளிட்ட 15 டிஎஸ்பிக்கள் 53 காவல் ஆய்வாளா்கள், 95 உதவி ஆய்வாளா்கள் என மொத்தம் 1,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT