தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

அப்போது, பொதுமக்களிடம் இருந்து பட்டா உள்பிரிவு செய்ய வேண்டி 4 மனுக்களும், முதியோா் உதவித்தொகை வேண்டி 8 மனுக்களும், தனிப்பட்டா வேட்டி 36 மனுக்களும், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் இதர கோரிக்கைக்கு 5 மனுக்களும் என மொத்தம் 53 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடி தீா்வு காண சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவுறுத்தினாா். மேலும், ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் கீழதட்டப்பாறையை சோ்ந்த 10 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 6 பேருக்கு குடும்ப அட்டைகள் (ஸ்மாா்ட் காா்டு), 3 பேருக்கு முதியோா் உதவித்தொகை ஆகியவற்றை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) பழனிவேலாயுதம், வட்டாட்சியா் செல்வக்குமாா் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT