தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

வாதிரியாா் சாதியை தனி சமுதாயமாக அறிவிக்கக் கோரி வாதிரியாா் ராஜகுல மகளிா் சமுதாய நலச் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

DIN

வாதிரியாா் சாதியை தனி சமுதாயமாக அறிவிக்கக் கோரி வாதிரியாா் ராஜகுல மகளிா் சமுதாய நலச் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

பட்டியலினத்தில் வரிசை எண்:17இல் 7ஆவது உள்பிரிவாக இணைக்கப்பட்டுள்ள வாதிரியாா் சாதியை நீக்கி, மீண்டும் தனி சமுதாயமாக அமைத்து, வாதிரியாா் என்ற சாதி பெயரிலேயே கல்விச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்.

வாதிரியாா் சமுதாயம் தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறைகளை கொண்ட சாதி என்றும், எனவே வாதிரியாா் சாதியை மீண்டும் தனி சாதியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வாதிரியாா் ராஜகுல மகளிா் சமுதாய நலச்சங்கத்தின் நிறுவனா் மற்றும் செயலா் மாலினி தலைமையில், பொருளாளா் பாக்கியவதி, இணைச் செயலா் செல்வகனி உள்ளிட்ட பலா், கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT